Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகளையும் காக்க இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது. அது, தொடர்பில் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பிலான 30/1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இன்னும் இரண்டு வருட கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர்பில், நேற்று புதன்கிழமை இலங்கை தொடர்பிலான அறிக்கை மனித உரிமைகள் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்டது. அந்த அறிக்கைக்கு பதிலளித்துப் பேசிய போதே பிரதி வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றோடு இணைந்து பணியாற்றி, வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றது. எந்த நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான ஆவணம் முழுமையானது இல்லை என்பதை ஐக்கிய நாடுகள் நன்கு அறியும். எந்த நாட்டிலும் இது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும்.

கடந்த காலத்தில் இலங்கையில் மக்கள் மிகவும் சிரமமமான மற்றும் துயரமான காலகட்டத்தை சந்தித்துள்ளனர். அவர்களின் துயர்துடைக்க நிறைய பணிகள் நடந்திருந்தாலும், இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பொறுப்பான ஓர் அரசாங்கமாக நாங்கள் இப் பணிகளை செய்து முடிப்போம்.

இது தொடர்பாக நாங்கள் அனைத்து அறிக்கைகளையும் கவனமாக படிப்போம், அனைத்தையும் தெளிவாக ஆராய்ந்து, மக்களுக்கு நலன் பயக்கும் வகையில், பொருளாதார வளம் மிக்க நாடாகவும், தன்னிசையான மற்றும் மக்களின் உரிமைகளை பேணும் நாடாக இலங்கை உருவெடுக்கும்.” என்றுள்ளார்.

எனினும், வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட நேரம் நிறைவடைந்தமையால் அவரது உரை இடைநடுவில் நிறுத்தப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to நாட்டு மக்கள் அனைவரதும் உரிமைகளைக் காக்க இலங்கை உறுதியாக உள்ளது: ஹர்ஷ டி சில்வா

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.