Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு பகுதியின் பல பகுதிகளிலும் இராணுவம் உள்ளிட்ட முப்படையும் ஆக்கிரமித்து வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் காணி விடுவிப்புத் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். எனினும், முடிவுகள் எதுவும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் பின்னரே, ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான காணி விடுவிப்பு தொடர்பிலான சந்திப்பும் இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

“வலிகாமம் வடக்கு, கேப்பாபுலவு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் சந்திப்பின் போது கோரினார். உடனடியாக இராணுவத் தளபதியை அழைத்துப் பேசிய ஜனாதிபதி, காணிகளை எப்போது விடுவிக்க முடியும் என்று கேட்டார். ஆனாலும் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும், எப்போது என்ற கால எல்லையை இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் குறிப்பிடவில்லை என்று ஜனாதிபதி எம்மிடம் கூறினார்.” என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

0 Responses to காணி விடுவிப்புத் தொடர்பில் மைத்திரியோடு சம்பந்தன் பேச்சு; எனினும், முடிவுகள் காணப்படவில்லை!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.