தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில்
வருமானவரித்துறை நடத்திய சோதனையில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் மக்கள் நலவாழ்வுத் துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம், மற்றும் அவருக்கு சொந்தமான கல்குவாரிகள்,
கல்லூரிகள், அலுவலகங்கள் , நண்பர்கள் இல்லங்கள், உதவியாளர்கள்
இல்லங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதோடு, சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதா கிருஷ்ணன், சமத்துவ மக்கள்
கட்சித் தலைவர் நடிகர் சரத் குமார், எம்ஜிஆர் பல்கலைக் கழக துணை வேந்தர்
கீதா லட்சுமி ஆகியோர்களது இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை
நடத்தி வருகின்றனர்.
சோதனையில் எழும்பூர் தனியார் விடுதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின்
விடுதி அறைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியது.அதோடு,
விஜயபாஸ்கர் உதவியாளர் வசித்து வரும் சேப்பாக்கம் பகுதி இல்லத்தில் 2
கோடியே 20 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியுள்ளதாகத் தகவல்கள்
வெளியாகி உள்ளன.

0 Responses to விஜயபாஸ்கர் உதவியாளர் இல்லத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல்