தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் ஐவருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் 20 வருட சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது.
நெதர்லாந்தில், 2003- 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்தோடு, சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களையும் இவர்கள் விநியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அனுப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சந்தேக நபர்களுக்கு இருபது ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் நால்வர் மேன்முறையீடு செய்தபோதும், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன் தண்டனையும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

0 Responses to முன்னாள் புலி உறுப்பினர்கள் ஐவருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் 20 வருட சிறைத் தண்டனை விதிப்பு!