Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 28.8 ஏக்கர் காணிகள் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டில் குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

மக்களின் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் உண்ணாவிரதங்களை அடுத்து, வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று 28.8 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலமான வீடுகளையும் கட்டங்களையும் கொண்ட இப்பகுதியானது, தற்போது வெறும் தரைமட்டமாக்கப்பட்ட பகுதியாக உள்ளதால் தமது காணிகளை அடையாளம் காண்பதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இங்கிருந்த கிணறுகள் கூட காணாமல் போயுள்ளதாகவும் அனைத்துக் கட்டங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக காணிகளுக்குரிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

0 Responses to வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 28.8 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

Post a Comment

Followers