இலங்கை- இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், இருநாட்டு அமைச்சர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் மட்டத்திலான 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்திய மத்திய விவசாய மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராதாமோகன் சிங் தலைமையிலான பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கை சார்பில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அமைச்சின் செயலாளர் மங்களிக்கா அதிகாரி, பணிப்பாளர் கிறிஸ்ரி லால் பெர்னான்டோ, மீன்பிடித்துறைக்கு உட்பட்ட மாகாண அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குகொள்ளவுள்ளனர்.
பேச்சுவார்த்தை தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து தெரிவிக்கையில், நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மீன்பிடிப்பிரச்சினைக்கு இந்த பேச்சுவார்த்தை இறுதித்தீர்வுக்கு வழிவகை செய்யும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக வடக்கு மீனவசங்க பிரதிநிதிகளுடன் அமைச்சரின் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாட்டு மீனவசங்க பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

0 Responses to இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் வரும் வெள்ளிக்கிழமை 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை!