Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் எந்தவித தீர்வுகளும் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால் 42வது நாளாகவும், வடமராட்சிக் கிழக்கின் மருதங்கேணியில் 19வது நாளாகவும் தொடர்ந்து வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறும், தகவல்களை வெளியிடுமாறும் கோரி கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்தனர். அந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே மருதங்கேணியிலும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இரு இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்தாலும் அரசாங்கம் எந்தவித பொறுப்பினையும் கூறுவதிலிருந்து விலகியிருக்கின்ற நிலையில், போராட்டத்தை கைவிடாது தொடர்வதற்கு போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த வாரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் 4 அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் கிளி’யில் 42வது நாளாகவும், மருதங்கேணியில் 19வது நாளாகவும் தொடர்கிறது!

Post a Comment

Followers