சித்திரைப் புதுவருடப் பிறப்போடாவது தங்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறி வேண்டிக் கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இன்று சனிக்கிழமை 55வது நாளாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கோரியுள்ளதாவது, “சித்திரை புதுவருட பிறப்போடு எங்களுக்கு நல்தொரு செய்தி கிடைக்க வேண்டும். அடுத்த வருடத்திலாவது எங்களின் உறவுகளோடு புதுவருட நிகழ்வை கொண்டாடுவதற்கு வழிசமைக்க வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எங்களுடை அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுக்கு நல்லதொரு தீர்வை வழங்கவேண்டும். அத்தோடு, எங்களுடைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையினர் எங்களோடு வந்து இணைந்து போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.” என்றுள்ளனர்.

0 Responses to சித்திரைப் பிறப்போடாவது நல்ல செய்தி கிடைக்க வேண்டும்; 55வது நாளாக போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கதறல்!