வடமேற்கு சிரியாவின் கிளர்ச்சியாளர் வசமுள்ள பகுதியான இட்லிப் நகரில் சிரிய அரசு மேற்கொண்ட இரசாயன ஆயுதத் தாக்குதலில் 58 பொதுமக்கள் பரிதாபமாகப் பலியானதாகவும் இன்னும் பலர் பாதிக்கப் பட்டதாகவும் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்பு தெரிவிக்கையயில் சிரிய அரசு அல்லது ரஷ்ய வான் படை இந்த இரசாயன ஆயுதத்தைப் பிரயோகித்திருக்கலாம் எனத் தாம் சந்தேகிப்பதாகக் கூறியுள்ளது.
மேலும் இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவ நிலையங்கள் மீதும் ராக்கெட்டுத் தாக்குதல் நடத்தப் பட்டதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயினும் தாம் இரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தியதாக சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுக்களை மீளவும் சிரிய அரசு மறுத்துள்ளது. ஆனால் இது உறுதியாகும் பட்சத்தில் 6 வருடங்களுக்கு முன் தொடங்கிய சிரிய உள்நாட்டுப் போரில் மிக மோசமான இரசாயனத் தாக்குதல்களில் ஒன்றாக இதுவும் பதிவு செய்யப் படும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த இரசாயனத் தாக்குதலில் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் வைத்திய சாலைகள் நிரம்பி வழிவதால் வீதிகளில் அவதிப் பட்டு வரும் பொது மக்களுக்கு உதவத் தாம் மிகுந்த சிரமத்துடன் அங்கும் இங்கும் அலைவதாக ஆம்புலன்ஸ் சேவையினர் தெரிவித்துள்ளனர். இட்லிப் ஆம்புலன்ஸ் சேவையாளரான முஹமது றசௌல் என்பவர் அளித்த தகவல் படி பலி எண்ணிக்கை 67 என்றும் 300 பேர் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது.
கடந்த சில வருடங்களிலும் சிரிய அரசு பொது மக்கள் மீது இரசாயனத் தாக்குதல் நடத்தி வந்ததாக மனித உரிமை அமைப்புக்கள் அவ்வப்போது குற்றம் சுமத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரியாவின் இட்லிப் நகரில் அரசின் இரசாயன ஆயுதத் தாக்குதலில் 58 பொதுமக்கள் பலி