திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவு
பெற்றுள்ளது.இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக
தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமிழகத்தில் 5
முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை
யையும் நிகழ்த்தி உள்ளார்.
குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு
மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு
எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை
உறுப்பினராகப் பதவியேற்றார்.
அவர் சட்டப்பேரவை உறுப்பினராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்
நிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.
1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை,
1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996,
2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என
13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து
தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
எம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்
அவர் போட்டியிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர்
மட்டுமே வெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை
உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை
முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா
ஆண்டையொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா வளைவு
அமைக்கப் பட்டது.

0 Responses to திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவு