மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடற்படை ஆக்கிரமித்து வைத்துள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விரைவில் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த காணிப் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுடன், மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் விரைவில் பேச்சுக்களை நடத்தி விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்வார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை கூடிய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், முள்ளிக்குளம் மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராடி வருவது தொடர்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to முள்ளிக்குளம் காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: ரணில்