Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தற்போது போதைப் பொருட்களை விநியோகிக்கும் மத்திய நிலையமாக மாறியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பழிவாங்கலே தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கையாகியுள்ளது. போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது. அதனால், குற்றச் செயல்களும் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெலியாவத்தையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்றைக்கு நாட்டில் ஒரு பௌத்த விகாரையைக் கூட அமைக்க முடியவில்லை. அப்படி அமைத்தால், அந்த விகாரையை அமைப்பதற்கு சிமெந்து எங்கிருந்து வந்தது என்று தெரிவித்து விசாரணைகளை ஆரம்பித்து பழிவாங்கல்களைச் செய்கிறார்கள். சோழ மன்னர்கள் அன்றைக்கு இலங்கையில் பௌத்தத்தை அழித்தார்கள். அதேபோன்று தற்போதையை ஆட்சியாளர்களும் செயற்படுகின்றனர்.” என்றுள்ளார்.

0 Responses to போதைப் பொருட்களை விநியோகிக்கும் நிலையமாக இலங்கை மாறியுள்ளது: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com