Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் கடந்த பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் தங்களின் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் இன்று புதன்கிழமை 45வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே மேற்கண்டவாறு கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 Responses to ‘எங்கள் உணர்வுகளை யாருமே புரிந்து கொள்கிறார்கள் இல்லை’: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை!

Post a Comment

Followers