யாழ். மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணிகள் மீளக் கையளிக்கப்பட்டு, மீள்குடியேற்றதுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நேற்று செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய போதே புதிய கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கட்டளை தளபதியுடன் சந்திப்பு பல நல்ல விடயங்கள் தொடர்பாக பேச வாய்ப்பு கிடைத்திருந்தது. இங்குள்ள பிரதானமான பிரச்சினைகளை அவர் அறிந்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் காணிகளில் மீள்குடியேற்றுவது தனது பிரதான கடமை என அவர் கூறியுள்ளார்.
தான் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கில் கடமையாற்றியபோது இங்கிருந்த நிலைமைகளுக்கும் இப்போதுள்ள நிலைமைகளுக்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், 2012ஆம் ஆண்டு இருந்த கட்டிடங்கள் இப்போது இடிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன் அவ்வாறு இடித்திருக்க வேண்டியதில்லை என கூறி வருத்தப்பட்டார். அத்தோடு, மீள்குடியேற்றத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அதில் தாமதங்கள் இருக்கலாம் ஆனால் நிச்சயமாக செய்யப்படும் என கூறினார்.” என்றுள்ளார்.

0 Responses to மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; விக்னேஸ்வரனிடம் யாழ். கட்டளைத் தளபதி தெரிவிப்பு!