இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையானது, சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இலங்கைக்கான அழுத்தங்களைத் தொடர்ந்தும் வழங்கும் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் 44வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை இரவு சந்தித்துப் பேசினர். இதன்போது, சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் சர்வதேச மன்னிப்புச் சபையே தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலிகளை நாங்கள் உணர்கின்றோம். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியாக இருக்கிறது.” என்றுள்ளார்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அழுத்தங்களை வழங்குவோம்: சர்வதேச மன்னிப்புச் சபை