Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மன்னார் முள்ளிக்குளம் மக்களை, சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் செட்டி உட்பட முகாமைத்துவக் குழுவினரே இவ்வாறு முள்ளிக்குளம் மக்களைச் சந்தித்து பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.

இதன்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தமது சொந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும், தமது காணிகள் விடுவிக்கப்பட்டதன் பின்னரே தாம் போராட்டத்தை கைவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 Responses to காணி மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முள்ளிக்குளம் மக்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபையின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.