Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் முன்னால் சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த கிர்கிஸ்தானில் பிறந்தவர் என்றும் ரஷ்யக் குடியுரிமை பெற்றவர் என்றும் கிர்கிஸ்தான் அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்புத் தாக்குதல் ஒரு தீவிரவாதச் செயல் என்று பரவலாக சந்தேகிக்கப் படும் நிலையில் இதுவரை எந்தவொரு இயக்கமும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை. குண்டு வெடிப்பு இடம்பெற்ற சென்னயா சதுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று நாள் முழுவதும் பல பொது மக்கள் வந்தவாறும் மலர் அஞ்சலி செய்தவாறும் உள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்ற பின் சுமார் 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அனைத்து சப்வே பொறிமுறையும் 6 மணித்தியாலங்களுக்கு முடங்கியது. மேலும் இன்று செவ்வாய்க்கிழமை கூட பல மெட்ரோ நிலையங்கள் வெறிச்சோடி உள்ளதுடன் பொது மக்கள் போக்குவரத்துக்காக அதிகளவில் பேருந்து வண்டிகளை நாடிய வண்ணம் உள்ளனர். ரஷ்யாவில் இச்சம்பவத்தை அடுத்து 3 நாட்கள் தேசிய துக்க தினம் அனுட்டிக்கப் படவுள்ளதுடன் ரஷ்ய அதிபர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா ரஷ்யாவுக்கு முழு ஆதரவையும் வழங்கும் என்றும் உறுதி மொழியும் அளித்துள்ளார்.

முன்னதாக ஆக்டோபர் 2015 இல் எகிப்தில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி வந்து கொண்டிருந்த ரஷ்ய ஏர்லைன் விமானத்தை ISIS சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணித்த 224 பேரும் கொல்லப் பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ரஷ்ய மெட்ரோ ரயில் நிலைய குண்டுவெடிப்பு சூத்திரதாரி கிர்கிஸ்தானில் பிறந்த ரஷ்ய குடிமகன் என அடையாளம்

Post a Comment

Followers