வவுனியாவில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இறுதி மோதல்களின் போது இராணுவத்திடம் தாம் கையளித்த உறவுகளை மீட்டுத் தருமாறும், நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் இந்தச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்போது பதிலளித்த அமைச்சர், “நல்லாட்சி அரசாங்கத்தினால் தமிழ் அரசியல் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுவிக்கப்படாதவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அத்தோடு, காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்களை வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஊடக தன்னிடம் கையளிக்குமாறும், தானும் நடவடிக்கைகளை எடுக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்தார் ராஜித சேனாரத்ன!