தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் பிணை மனு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று திங்கட்கிழமை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் விமல் வீரவங்ச, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். எனினும், பின்னர் அதனைக் கைவிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே அவரின் பிணை மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

0 Responses to விமல் வீரவங்சவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு!