இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு முரணாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் வைத்து தக்க பதில் வழங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறையை முன்னெடுக்க முடியாது என்று ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்தும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதத்திலேயே அரச தலைவர்களுக்கு தான் பதிலளிக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to மைத்திரி - ரணிலின் ஐ.நா. தீர்மானத்துக்கு முரணான கருத்துக்களுக்கு பாராளுமன்றத்தில் பதில்; சம்பந்தன் தெரிவிப்பு!