நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான ஒட்டாவா பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவி உயர்ஸ்தானிகரான லோரா டேவிஸ் இதனைக் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கான வேலைத்திட்டத்துக்கு பிரித்தானியா 2010ஆம் ஆண்டு முதல் நிதி உதவிகளை வழங்கி வருகின்றது.
தொடர்ந்தும் அந்த உதவித் திட்டத்துக்காக பெருமளவு நிதியைச் செலவிடவுள்ள பிரித்தானியா, 2019ஆம் ஆண்டளவில் மொத்தமாக 1.2 பில்லியன் ரூபாய்களை செலவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

0 Responses to நிலக்கண்ணி வெடிகளுக்கு எதிரான ‘ஒட்டாவா பிரகடனத்தில்’ இலங்கை கைச்சாத்திட வேண்டும்: பிரித்தானியா