எதிர்காலத்தில் சர்வதேச ரீதியில் இந்தோ - பசுபிக் சமுத்திர வலயம் மிகவும் முக்கியமானதொரு வலயமாக மாறும். ஆகவே, இந்த வலயத்தில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டுமாயின், இங்கு சமாதானத்தை பாதுகாக்க பிராந்திய நாடுகள் பாடுபட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் முன்னணி தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்ற வர்த்தக மாநாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஜப்பானிய வெளிநாட்டு வர்த்தக சங்கம், வர்த்தக கைத்தொழில் சபை, இலங்கை - ஜப்பானிய ஒத்துழைப்புக் குழு முதலான அமைப்புக்கள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்தன.
உலக சுற்றுச்சூழல் பற்றிய இலங்கையின் வாசிப்பும், ஜப்பானின் முக்கியத்துவமும் என்ற தொனிப்பொருளில் பிரதமர் அங்கு உரையாற்றினார். வங்காள விரிகுடா வலய நாடுகளின் எதிர்கால சனத்தொகையைக் கருத்தில் கொண்டு முதலீட்டுத் திட்டங்களை வகுக்க வேண்டுமென்றும் பிரதமர் அங்கு கூறியுள்ளார்.
தெற்காசிய மற்றும் வங்காள விரிகுடா கரையோர நாடுகளின் எதிர்கால நலன்கருதி முதலீட்டு மற்றும் உற்பத்தித் திட்டங்களை அபிவிருத்தி செய்வது அவசியம். இந்தப் பிராந்தியங்களைச் சேர்ந்த நாடுகளின் சனத்தொகை அடுத்து வரும் 20 வருடங்களில் பெருமளவு அதிகரிக்கக்கூடும். அதற்கு ஏற்ற திட்டங்களை வகுப்பது ஜப்பானிய அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி, ஜப்பானிய தொழில் முயற்சியாளர்களுக்கும் உள்ள பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to இந்தோ - பசுபிக் சமுத்திர வலயத்தில் சமாதானத்தை உறுதிப்படுத்த பிராந்திய நாடுகள் இணைய வேண்டும்: ரணில்