Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் கடல் சார் உரிமையை இந்தியாவிடம் எந்தவொரு தருணத்திலும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுத்து மிக விரைவில் இந்திய (தமிழக) மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துவோம். இதுவரை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களே விடுவிக்கப்பட்டார்கள். மாறாக, பிடிக்கப்பட்ட அவர்களின் எந்தவொரு படகும் விடுவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு மீனவர்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்திய- இலங்கை இரு தரப்பு அதிகாரிகள் மட்ட பேச்சுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது. இதில் கலந்துக் கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் வருகின்றனர். இதன் போது எமது கடல் உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது. இந்திய மீனவர்களை விடுவிப்பது போன்று அவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது. படகுகளை கைப்பற்றுவதன் ஊடாகவே அவர்களின் வருகையை குறைக்க முடிந்துள்ளது.

போரில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள வடக்கு மீனவர்களின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டிய மனிதாபிமான கடமை இந்தியாவிற்கு உள்ளது. அடுத்த மாதம் அளிவில் வடக்கிற்கு விஜயம் செய்து அப்பகுதி மீனவர்களின் பிரச்சினைகளை நேரடியாக பார்வையிடவும் கேட்டறியவும் உள்ளேன். 2020 இலக்கை அடைவதற்கு கடற்றொழில் அமைச்சு பரந்தளவிலான திட்டங்களை முன்னெடுத்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to இலங்கையின் கடல் சார் உரிமையை இந்தியாவிடம் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers