ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சில கருமங்களை ஆற்றியிருந்தாலும், அதில் முழுமையாக திருப்தி கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் இந்த அரசாங்கத்தையும் வீட்டிற்கு அனுப்ப நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் மக்கள் தமது காணிகளை மீட்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதற்காகவும் போராடும் அதேவேளை, ஒரு சிலர் தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பட்டதாரிகள் தமது வேலைவாய்ப்பிற்காகவும் போராடி வரும் நிலையில், அரசாங்கம் அவற்றில் அக்கறை கொள்வதில்லை. இவ்வாறான நிலைமை நீடித்து தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டால் தயவு தாட்சணையின்றி இந்த அரசாங்கத்தையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும்” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரி - ரணில் அரசாங்கத்தில் திருப்தி கொள்ள முடியாது: சம்பந்தன்