Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு, ஐந்து வருடங்களின் பின்னர் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் இன்று புதன்கிழமை கூடுகிறது. இதன்போது, கட்சியின் பிரதித் தலைவர்களாக 3 பேரையும், உப தலைவர்களாக 3 பேரவையும் நியமிப்பதற்கு தீர்மானிக்கட்டுள்ளது.

அதனடிப்படையில், அமைச்சர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க மற்றும் கபீர் ஹாசீம் ஆகியோரின் பெயர்கள் பிரதித் தலைவர்கள் பதவிக்குப் பரிந்துரைக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

அத்தோடு, அமைச்சர்களான மங்கள சமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்கள் உப-தலைவர்கள் பதவிக்குப் பரிந்துரைக்கப்படலாம் என்றும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கட்சியின் பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம் மற்றும் பிரதி பொதுச் செயலாளராக சுஜீவ சேனசிங்க ஆகியோர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

0 Responses to ஐ.தே.க செயற்குழு இன்று கூடுகிறது; பொன்சேகாவுக்கு உப தலைவர் பதவி!

Post a Comment

Followers