Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணை அல்லது புனர்வாழ்வு ஆகிய தெரிவுகளினூடு விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பிணை அல்லது புனர்வாழ்வு அல்லது விடுதலை ஆகிய தெரிவுகளில் ஏதாவது ஒன்றை பெற்று தரும்படி கோருகிறார்கள்.

பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு சட்டமா அதிபர் தரப்பு ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து பிணை வழங்கல், சாத்தியமாகியது. இந்நிலையில் பல வருடங்களாக தடுப்பில் இருக்கின்ற தமிழ் கைதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த காலங்களை விட , இன்று தமிழ் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது. தமிழ் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு ஆளும் தரப்பு, எதிர் தரப்பு அரசியல் கட்சிகளும் இந்தநிலைப்பாட்டை ஆதரிக்கின்றன.

இது தமிழ்- சிங்கள புத்தாண்டு காலம். அத்த மாதம் சர்வதேச விசாக பண்டிகையை, ஐ.நா சபையின் ஆதரவுடன் நமது அரசாங்கம் இலங்கையில் முதன் முறையாக கொண்டாடவுள்ளது. இவற்றை கணக்கில் கொண்டு இவர்களின் விடுததை விடயத்தில கூடுதல் பவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் கைதிகள் மீதான குற்றச்சாட்டும், விமல் வீரவன்ச எம்பி மீதான குற்றச்சாட்டுகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், இந்த கைதிகள் மிக நீண்டகாலமாக சிறைகளில் இருக்கிறார்கள். இதை ஏன் சொல்கிறேன் என்றால், கைதிகளுக்கு நிவாரணம் வழங்காமல் இருக்க, இந்த சட்ட அடிப்படைகளை கண்டுபிடித்து சொல்ல இங்கே பலர் காத்திருக்கின்றர்கள். இந்த கைதிகளில் பலரது வாழ்வின் பெரும்பகுதி சிறைகளில் முடிந்தே விட்டது. சட்ட அடிப்படைகளை விட இந்த மனிதாபிமான அடிப்படைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று ஜனாதிபதியிடம் இது தொடர்பில் எழுத்து மூலமாக அறிவிக்கிறேன். அதேபோல் அடுத்தவார அமைச்சரவை கூட்டத்திலும் இதுபற்றி பேசவுள்ளேன்.” என்றும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மனோ கணேசன் கூறியுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க வேண்டும்: மனோ கணேசன்

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...