Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அசராத சசிகலா அசத்திய பாஜக

பதிந்தவர்: தம்பியன் 19 April 2017

சேகர் ரெட்டி இல்லத்தில் வருமானவரித்துறையிர் நடத்திய ரெய்டில் சிக்கிய
ஆவணங்களை வைத்து ஓ.பி.எஸ்.சை பா.ஜ.க இயக்கி வந்தது.
ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தவரை பா.ஜ.க.வின் அனைத்து திட்டங்களுக்கும்
ஒப்புதல் அளித்து வந்தார். இதனை அறிந்த சசிகலா ஓ.பி.எஸ்-சை ராஜினாமா
செய்ய வைத்து, தன்னை முதல்வராக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவிக்க
வைத்தார். அதுவரை பொருமையாக இருந்த டெல்லி மேலிடம் ஆளுநரை வைத்து
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது.

மேலும் சொத்து குவிப்பு வழக்கை தூசி தட்டி சசிகலாவை சிறைக்கு அனுப்பி
வைத்தனர். இதற்க்கெல்லாம் அசராத சசிகலா எடப்பாடியை முதல்வராகவும்,
டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் நியமித்தார். இந்நிலையில்
ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைதேர்தலில் தன்னை வேட்பாளராக அறிவிக்க வைத்து
களம் இறங்கினார் தினகரன். இது மேலும் பா.ஜ.க.விற்கு டென்ஷனை கொடுக்க
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தையே முடக்கியது.

ஆனாலும் தொகுதி முழுவதும் சாதாரண தொண்டன்லிருந்து அமைச்சர்கள்,
முதலமைச்சர் ஆகியோரின் படை, பண பலத்துடன் களத்தில் மாஸ் காட்டியதால்
தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. தினகரன் வெற்றி பெற்றால் ஆட்சி
அதிகாரத்திற்க்கு வந்து ஆதிக்கம் செலுத்துவார் என எண்ணிய பா.ஜ.க. மேலிடம்
இதற்க்கெல்லாம் அமைச்சர் விஜயபாஸ்கரனின் சித்து விளையாட்டுகள்தான் காரணம்
என எண்ணி விஜயபாஸ்கரின் இல்லம் மற்றும் அவரது குவாரிகளில் அதிரடி ரெய்டு
நடத்தியது. மேலும் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தனர்
என கூறி தேர்தலையே ரத்து செய்ய வைத்தது.

தற்போதைக்கு தினகரனின் வெற்றி தள்ளிபோனாலும் எப்பொழுது தேர்தல்
நடந்தாலும் அவர் வெற்றி பெற்று ஆட்சியில் அதிகாரத்தை கைப்பற்றுவார் என
கருதியவர்கள் ஓ.பி.எஸ் உடன் இணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா அணி
அமைச்சர்களுக்கு மறைமுக மிரட்டல் விடுத்தனர். மேலம் கடந்த வாரம் எடப்பாடி
பழனிச்சாமியின் சம்மந்தி ஈரோடு ராமலிங்கத்தின் கூட்டாளி பெங்களூர்
நாகராஜின் பண்ணை வீட்டில் நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500, 1000
ரூயாய் நோட்டுக்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர்.

இதில் ஆடிப்போன எடப்பாடி தரப்பினர் தினகரனை ஒதுக்கி வைக்காவிட்டால்
அனைவருக்கும் பிரச்சனைகள் வரும் என முடிவெடுத்திருந்த நிலையில்,
டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்க இடைத்தரகர்
மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திராவை கைது செய்தது டெல்லி
போலீஸ். இதில் தினகரனை முதல் குற்றவாளியாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு
தினகரன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என நிலைமை மாறியுள்ளது. இதுதான்
என சமயம் பார்திருந்தவர்கள் எடப்பாடியின் உறவினருறும் மின்துறை
அமைச்சருமான தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி தினகரனை
மொத்தமாக ஒதுக்கி வைக்க முடிவெடுத்தனர்.

0 Responses to அசராத சசிகலா அசத்திய பாஜக

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com