எமது பிரச்சினைகள் தொடர்பில் எம்மால் முடிந்தளவுக்கு அரசாங்கத்திடம் எடுத்துக் கூறி வந்திருக்கின்றோம். ஆனாலும், அதற்குரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் நாயகம் சலில் ஷெட்டி தலைமையிலான குழுவினருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசமும் சர்வதேச நிறுவனங்களும் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலமே, பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறிய போதும் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை: விக்னேஸ்வரன்