Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வழங்கியுள்ள இரண்டு ஆண்டு கால அவகாசத்தினை, இழுத்தடிப்புக்களுக்காக அரசாங்கம் பயன்படுத்தக் கூடாது என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் சலில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர், வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டதுடன், பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டிருந்தார். தன்னுடைய விஜயத்தினை முடிந்துக் கொண்டு திரும்பும் வழியில் நேற்று புதன்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தினார். இதன்போது, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் வழங்கியுள்ள கால அவகாசம் என்பது, தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள விடயத்தை நிறைவேற்றுவதற்கானதே. மாறாக, இழுத்தடிப்புக்களைச் செய்வதற்கானது அல்ல.

இலங்கையின் இறுதி மோதல்களில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதான குற்றச்சாட்டுக்கள் உண்டு. அவை, தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவே, நியாயமான தீர்வினைப் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும். வடக்கில் இராணுவத்தினரின் அதிக பிரசன்னத்தை நாங்கள் கண்டோம். அது, நீக்கப்பட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஐ.நா. வழங்கிய கால அவகாசத்தினை இழுத்தடிப்புக்களுக்காக இலங்கை பயன்படுத்தக் கூடாது: சர்வதேச மன்னிப்புச் சபை

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.