இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகள் என்கிற பேச்சுக்கு இடமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டால், யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் என்கிற ரீதியில் முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை நேற்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்த ராஜித சேனாரத்ன, ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

0 Responses to போர்க் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை: ராஜித