இலங்கையின் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், வேறு பகுதிகளிலிருந்தும் புகலிடம் கோரிச் செல்பவர்களை அவுஸ்திரேலியா மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சர் கொன்சீற்றா பியரவன்ரி-வெல்ஸ் மற்றும் அவரது குழுவினர் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது, முதலமைச்சர் தலைமையிலான வடக்கு மாகாண உறுப்பினர்களையும் அவர்கள் சந்திந்திருந்தார்.
இதன்போதே, வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரனால் மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான நிலைமை, புலம்பெயர்ந்தவர்கள் முதலீடு செய்வதற்கான பொருளாதார நிலைமை, போர்க்காலத்தின் பின்னரான நிலைப்பாடுகள் குறித்து பேசப்பட்டதுடன், பெண்களின் நிலைகள் குறித்து ஆராய்ந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புகலிடக் கோரிக்கையாளர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்; ஆஸி அமைச்சரிடம் அனந்தி சசிதரன் கோரிக்கை!