Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா புதிதாக நியமிக்கப்பட்டுள்ளமைக்கு சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டு சில நாட்களுக்குள்ளேயே போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நபருக்கு இவ்வாறு பதவி வழங்கப்பட்டமையானது, ஐக்கிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை மீறும் செயலாகும் என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரமன்றி தேசிய அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பிய சர்வதேச சமூகத்திற்கும் இழைக்கப்பட்ட மிகவும் மோசமான துரோகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி மோதல்களின் போது களமுனைத் தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது, போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே, நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளர் நாயகமாக சவேந்திர சில்வா பதவியேற்றிருந்தார்.

0 Responses to சவேந்திர சில்வா நியமனத்துக்கு சர்வதேச நீதி அமைப்புக்கள் கண்டனம்!

Post a Comment

Followers