Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சவுதி அரேபியாவின் இராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி வரும் பிரதான பங்காளியான அமெரிக்கா கடந்த சில வருடங்களாக பத்து பில்லியன் டாலர்கள் வரை செலவில் F-15 ரக போர் விமானங்கள் உட்பட கமாண்டிங் பொறிமுறைகள் வரை வழங்கி வந்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் ஒரு வாரத்தில் விஜயம் செய்யவுள்ளார்.

இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட $100 பில்லியன் டாலருக்கும் அதிக பொருட் செலவில் சவுதிக்கு இன்னமும் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கில் அமெரிக்காவின்  மிக நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலுடன் ஆயுத பலத்தை சமப்படுத்தும் அதே நேரம் கடந்த ஒரு தசாப்தத்தில் மாத்திரம் $300 பில்லியன் டாலருக்கும் அதிக செலவில் சவுதியின் இராணுவத்துக்கு அமெரிக்கா ஆயுத உதவி வழங்கியுள்ளது.

மே 19 ஆம் திகதி சவுதிக்குத் தனது முதல் அரச முறைப் பயணத்தை டிரம்ப் மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக வழங்கப் பட்டு வரும் இந்த ஆயுத உதவி மூலம் அமெரிக்காவின் பொருளாதாரத்துக்கும் வளர்ச்சி ஏற்படுவதாகவும் பெயர் குறிப்பிடாத வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் சவுதிக்கான தனது விஜயத்தின் போது அதன் முக்கிய தலைவர்களை மாத்திரம் அல்லாது 6 நாடுகள் அடங்கிய வளைகுடா கோப்பரேஷன் கவுன்சிலின் தலைவர்களையும் சந்திப்பதுடன் அரபு முஸ்லிம் தலைவர்களுடன் மதிய உணவையும் ஏற்றுக் கொள்கின்றார். அதன் பின்னரான பேச்சுவார்த்தையின் போது தீவிரவாதத்தை எதிர்ப்பது மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் வரவேற்பு இதழ் வழங்கப் பட்டுள்ள 56 தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கவுள்ளார்.

முக்கியமாக சவுதிக்கு இருந்து வரும் இஸ்லாமிய தேசப் போராளிகளின் அச்சுறுத்தல் மற்றும் யேமென் உள்நாட்டுப் போர் போன்ற விவகாரங்கள் மட்டுமன்றி செங்கடலில் கப்பற்படை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளின் அச்சுறுத்தல் தொடர்பிலும் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமான இதன் போது சவுதி அரேபியாவைத் தொடர்ந்து இஸ்ரேல், வத்திக்கான், நேட்டோ மாநாட்டுக்காக புருஸ்ஸெல்ஸ் மற்றும்  7 நாடுகளின் மாநாட்டுக்காக சிசிலி  ஆகிய பிரதேசங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சவுதி அரேபியாவுக்கு டிரம்ப் விஜயம் செய்யவுள்ள நிலையில் அமெரிக்காவுடன் $100 பில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...