“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நிலை என்ன? அரசாங்கமே பதில் கூறு?” என்று வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்றோடு (செவ்வாய்க்கிழமை) 100 நாட்களை எட்டியுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் வளாகத்தில் இரவு பகல் பாராது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், பொதுமக்களும் இந்தத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொடர் போராட்டத்தின் 100 நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த வீதி மறியல் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆயினும், வடக்கு- கிழக்கின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆயிரக்கணக்கான உறவுகள் அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு, கூட்டுப் பிரார்த்னைகளையும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

0 Responses to காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது நாளாக தொடர்கிறது; கிளிநொச்சி வீதி மறியல் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!