Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒவ்வொரு வருடமும் மே 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (தமிழின படுகொலை)’ வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முள்ளிவாய்க்காலில் மே 18ஆம் திகதி இடம்பெற்ற தமிழினப் படுகொலையை கடந்த இரு வருடங்களாக தமிழினப் படுகொலை வாரமாக அனுஷ்டித்து வருகிறோம். அந்த வகையில் இவ்வருடமும் அனுஷ்டிக்கவுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் அதிகமானவர்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செம்மணிப் பகுதியில் 12ஆம் திகதி நினைவு ஏந்தல் இடம்பெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 13ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும். நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்தில் இடம்பெற்ற படுகொலை நினைவு நாள் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும். இதேவேளை, நெடுந்தீவு பகுதியில் இடம்பெற்ற குமுதினி படகுப் படுகொலை 15ஆம் திகதியன்று நினைவு கூரப்படுவதுடன், 16 மற்றும் 17ஆம் திகதிகளில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் அனுஷ்டிக்கப்படும். இறுதியாக மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நினைவு ஏந்தல் அனுஷ்டிக்கப்படும். இந்நிகழ்வுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை தாங்குவார்.” என்றுள்ளார்.

0 Responses to மே 12- 18 வரை ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வாரம் அனுஷ்டிப்பு!

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.