Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பின் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதிகளில் சுமார் 1800 சட்டவிரோதக் கட்டடங்கள் காணப்படுவதாக பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டவிரோதக் கட்டடங்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் ஐந்து மாடி கட்டடமொன்று நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்த நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடி திருமண மண்டபக் கட்டடமானது, முற்றிலும் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. முறையற்ற கட்டுமானப் பணிகளே மேற்படி அனர்த்தத்திற்கு காரணம்.

குறித்த அனர்த்தம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அனர்த்தத்திற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 20இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, மேலும் இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.

0 Responses to வெள்ளவத்தை- பம்பலப்பிட்டி பகுதிகளில் 1800 சட்டவிரோதக் கட்டடங்கள்: சம்பிக்க ரணவக்க

Post a Comment

Followers