அண்மையில் ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு எண்ணப் பட்டு இன்று சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. அந்நாட்டு மக்கள் தொகையில் 70% வீதமானவர்கள் அதாவது 4 கோடி மக்கள் வாக்களித்திருந்தனர். இந்த அதிபர் தேர்தலில் முக்கியமாக ஈரானின் தற்போதைய அதிபரான 68 வயதாகும் ஹசன் றௌஹானி மற்றும் 56 வயதாகும் இப்ராஹிம் ராய்சி ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
வெளியான தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் பிரகாரம் 58.6% வீத வாக்குகளை றௌஹானியும் 39.8% வீத வாக்குகளை இப்ராஹிமும் பெற்றிருந்தனர். இதன் மூலம் பழமை வாத கட்சியைச் சேர்ந்த இப்ராஹிம் ரைசியை வீழ்த்தி ஹசன் றௌஹானி வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஈரானின் அதிபராக றௌஹானி 2 ஆவது முறை பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈரான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2 ஆவது முறையாக அதிபராகின்றார் ஹஸன் றௌஹானி