காஞ்சிபுரம் மாவட்டம் படூரில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை
மூடக்கோரி 3ம் வகுப்பு மாணவன் ஆகாஷ் கலெக்டர் பொன்னையாவிடம் மனு ஒன்றினை
தாக்கல் செய்தான்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது✍, 'படூர் கிராமத்தில் இதுவரை மதுபானக்கடை
இல்லை. சில நாட்களுக்கு முன்பு ஏழை, எளிய, தலித் மக்கள் வசிக்கும் எங்கள்
பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை எதிர்த்து எங்கள்
பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தாய்மார்கள் ஒன்றுசேர்ந்து எதிர்த்துப்
போராடினோம். இருந்தபோதிலும், அந்த இடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது. அதை
எதிர்த்து போராடிய பலர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. மதுவால் ஏற்கனவே
எங்கள் கிராமம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது'. என்று இருந்தது.
இந்த மனுவை படித்த கலெக்டர், உடனே அந்த டாஸ்மாக் அதிகாரிகளை அழைத்து,
படூரில் உள்ள மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்⚖.
இதனை அடுத்து அந்த மாணவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், படூரில்
டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுத்த கலெக்டர், எனக்கு ஒத்துழைப்பு தந்த
மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி.
போராட்டம் நடத்தியதால் படிப்பதில் இருந்து கவனத்தை சிதறவிடமாட்டேன் ஏ
என்று கூறினான்

0 Responses to டாஸ்மாக் கடையை மூட கோரி 3ம் வகுப்பு படிக்கும் மாணவன் மனு