மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான மத்திய அரசின் அரசாணை அரசியலமைப்புக்கு
எதிரானது என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டி உள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தொடர்பான அரசாணையை மேற்கு
வங்கத்தில் பின்பற்ற முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி
தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை
சந்தித்த மம்தா பானர்ஜி மத்திய அரசின் இந்த புதிய அறிவிக்கையை எங்களால்
ஏற்க முடியாது. அதை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்.
சட்டப்படி என்ன செய்யலாம் என்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன்
ஆலோசனை நடத்த உள்ளோம், இந்த சட்டம் என்பது மாநில அரசின் உரிமையை
பறிக்கும் ஒரு அப்படமான செயல்.மேலும் இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது
ஏன் ரமலான் மாத துவக்கத்தில் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு
வந்துள்ளது? யாருடைய உணவிலும் தலையிடும் உரிமை அரசுகளுக்கு கிடையாது”
என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேலும் மாநில அரசின் உரிமைகளில்
தேவையில்லாமல் மத்திய அரசு தலையிடக் கூடாது என்று வேண்டுகோள்
விடுப்பதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.

0 Responses to மத்திய அரசின் அரசாணை அரசியலமைப்புக்கு எதிரானது: மம்தா