Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொல்பொருள் மற்றும் வனவள பிரதேசம் என வடக்கு- கிழக்கிலுள்ள காணிகள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஆராய பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் நாட்டில் தற்பொழுது தலைதூக்கியுள்ள இனவாத பிரச்சினை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவும், அநுரகுமார திசாநாயக்கவும் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் பிரதி அமைச்சர் அநுராத ஜெயரத்ன ஆகியோர் பதிலளித்தனர். இதன்போது குறுக்கீடு செய்து உரையாற்றியபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது, “கிழக்கிலுள்ள தொல்பொருள் முக்கியமான இடங்கள் தொடர்பில் தவறான கருத்துக்கள் சென்றடைகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இது தொடர்பாக ஆராய்ந்து உண்மை நிலைமையை வெளிப்படுத்த வேண்டும். அண்மைக்காலமாக இந்தப் பிரச்சினை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதற்கு தீர்வுகாணப்பட வேண்டும். கிழக்கில் தொல்பொருள் இடங்கள் அழிக்கப்படுவதாக தவறான கருத்து பரப்பப்படுகின்றது என்றார்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர் அநுராத ஜெயரத்ன. 2012/13 காலத்தில் விசேட செயலணி அமைக்கப்பட்டு மீள்குடியேற்றம் மற்றும் நடவடிக்கைகளுக்கான காணி வழங்கப்பட்டது. இதன்போது சட்டவிரோத குடியேற்றம், காடழிப்பு என்பன இடமபெற்றன. இந்த நிலையில் வில்பத்து வன பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய கடந்த 16ஆம் திகதி சுயாதீன குழு அமைக்கப்பட்டது. வர்த்தமானியூடாக வில்பத்து பிரதேசத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை முறையாக குடியேற்றவும் இதனால் முடியுமாகும்.

யுத்தத்தினால் கிழக்கிலுள்ள தொல்பொருள் முக்கியமான இடங்கள் நாசமடைந்தன. அம்பாறை மாவட்டத்தில் 2013 முதல் 2017 வரை முறையே பல இடங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும் அம்பாறை மாவட்டத்தில் புனரமைக்கப்பட வேண்டிய 430 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.” என்றுள்ளார்.

இதற்காக தெரிவுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் கூடி முடிவு செய்வதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய இதன்போது அறிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு கிழக்கிலுள்ள காணிகள் பிரச்சினையை ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழு அவசியம்: ரவூப் ஹக்கீம்

Post a Comment

Followers