Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகம் அருகே புதன்கிழமை அடுத்தடுத்து நடைபெற்ற இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 3 போலிசார் கொல்லப் பட்டும் 6 போலிசார் உட்பட 12 பேர் வரை படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலாகக் கருதப் படும் இத்தாக்குதல்களுக்கு ISIS போராளிகள் பின்புலமாக இருக்கலாம் என இந்தோனேசிய காவற் துறை பலமாக சந்தேகிக்கும் நிலையில் பொது மக்களை அமைதி காக்குமாறு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வலியுறுத்தி உள்ளார். இக்குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்களைக் கண்டு பிடிக்கும் பணியை இந்தோனேசியப் போலிசர் முடுக்கி விட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேகத்துக்கு உரிய இருவரை அடையாளம் காணும் பணியிலும் போலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உலகில் மிக அதிகளவு முஸ்லிம் மக்களின் சனத்தொகையைக் கொண்ட நாடான இந்தோனேசியாவில் இதற்கு முன்பு 2002 ஆம் ஆண்டு பாலி நகரில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 202 பொது மக்கள் கொல்லப் பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக்குமாறு அதிபர் விடோடோ வலியுறுத்து

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...