Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருகோணமலை மூதூரில் சிறுமிகள் மூவர் கடந்த நாட்களில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கட்ட சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றம் இழைத்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும் படி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

மூதூர் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் மனோ கணேசன் மூதூர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக சில்வாவிடம் பணிப்புரைகளை வழங்கி, மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு அறிவிக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, “பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் திருகோணமலை வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளன. சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். மருத்துவ அறிக்கையை அடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள்.

இந்த விசாரணைகள் தொடர்பில் எந்தவித அழுத்தங்களுக்கும் இடம் கொடுக்காமல் குற்றம் இழைத்தவர்களுக்கு உரிய அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதை உறுதிபடுத்தும்படியும், இந்த சம்பவத்தை காரணமாக கொண்டு அந்த பகுதியில் எந்தவித பதற்றத்துக்கும் இடம் ஏற்படாமல் கவனித்து கொள்ளும்படியும் உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்.” என்றுள்ளார்.

0 Responses to மூதூரில் சிறுமிகள் துஷ்பிரயோகம்; பாரபட்சமற்ற விசாரணைகளுக்கு பணிப்பு: மனோ

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.