திருப்பதி லட்டுபோல் இனி பழநியிலும் இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படும்.
பிரசித்திபெற்ற பழநி முருகன் கோயிலில், கோயில் நிர்வாகம் தரப்பில்,
அபிஷேக பஞ்சாமிர்தத்தை அரைகிலோ ரூ.35க்கும், டின் ஒன்றின் விலை
ரூ.40க்கும் விற்கப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, பக்தர்களுக்கு
தொன்னையில் இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதன்படி, தினமும் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்க இந்து
அறநிலையத்துறை முடிவுசெய்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று காணொலி மூலம்
இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை துவக்கிவைக்கிறார். இதுகுறித்து
கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் கூறுகையில், தினமும் மாலை 5.30 மணிக்கு
நடைபெறும் சாயரட்சை பூஜைக்குப்பின் பக்தர்களுக்கு தொன்னையில்
பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்கப்படும். சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு 20
கிராம் வீதம் 40 கிலோ பஞ்சாமிர்தம் வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
0 Responses to திருப்பதி லட்டுபோல் இனி பழநியிலும் இலவசமாக பஞ்சாமிர்தம்