Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு சமூக நியாயத்தை நிறைவேற்றும் அரசியல் சக்தியே எதிர்காலத்தில் ஆட்சியமைக்க முடியும். மாறாக, இனவாதத்துடன் பிரிந்திருக்கும் எவராலும் ஆட்சியமைக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கதுருவெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்றுமாடி கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒரே நாட்டு மக்களாக அனைவரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். அனைத்து இனங்களிலுமுள்ள பிற்போக்குவாதிகள் பல்வேறு முரண்பாடுகளை ஏற்படுத்தி ஒற்றுமையின்மையை விதைக்க முயற்சியெடுக்கின்றனர். அனைவரும் அது தொடர்பில் நுண்ணறிவுடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யும் போது இனம், மதம் அல்லது கட்சிக்குரியதென்பது முக்கியமானதல்ல என்பதுடன், தேவை மட்டுமே முக்கியமானது.

நாட்டின் அபிவிருத்திக்காக அறிவும், பண்பும் நிறைந்த மக்களை உருவாக்குவதற்காக கல்வி வளர்ச்சியடைய வேண்டும். கல்வித்துறையில் பௌதீக மற்றும் மனித வள அபிவிருத்திக்காக எந்தவொரு பின்னடைவுமின்றி தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது.” என்றுள்ளது.

0 Responses to இனவாதத்துடன் பிரிந்திருக்கும் யாராலும் எதிர்காலத்தில் ஆட்சியமைக்க முடியாது: ஜனாதிபதி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...