Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியப் பொருளாதார அபிவிருத்தியின் பலனை இலங்கையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான சர்வதேச வெசாக் தின நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே நரேந்திர மோடி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அசோகச் சாம்ராஜ்ஜியத்தின் மஹிந்த தேரரும், சங்கமித்தா பிக்குனியும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டுவந்தனர். இதற்கமைய, பௌத்தத்தின் கேந்திர நிலையமாக, இலங்கை தற்போது விளங்குகின்றது. பின்னர், இலங்கையின் அநகாரிக்க தர்மபால அவர்கள், தர்மத்தின் தகவலை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, நூற்றுக்கணக்காண ஆண்டுகளைக் கடந்ததாகும். இந்நிலையில், இந்தியாவின் விமானச்சேவை நிறுவனம், கொழும்புக்கும் இந்தியாவின் வாரணாசிக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை, விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. அதன் மூலம், பௌத்த மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், பெரும் பயனை அடைய முடியும்.” என்றுள்ளார்.

0 Responses to இந்தியப் பொருளாதார அபிவிருத்தியின் பலனை இலங்கையும் பெறலாம்: மோடி

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.