Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடவுள் எப்போது கருணை காட்டுகிறாரோ அப்போதுதான் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும். அதற்காக கடவுளை நம்பிக் காத்திருக்க முடியாது என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் தீர்வுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் வெகு விரைவில் தீர்வு கிடைக்கும் என எண்ணியிருந்தோம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நோக்கும் போது தீர்வு எப்போதோ ஒரு நாளைக்கு கிடைக்கும் என்ற நிலையே காணப்படுகிறது. அதை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்காது, எப்பொழுது கடவுள் அந்தத் தீர்வை எங்களுக்கு வழங்கவேண்டும் என்று கருணை கூறுகின்றாரோ அன்றைக்குதான் தீர்வு கிடைக்கும். எங்களுடைய தீர்வு என்றைக்கோ ஒரு நாள் கடவுளால் எழுதியிருந்தால், அது அன்றைக்கு கிடைக்குமோ இல்லையோ நாங்கள் இப்படியே வீதியில் நிற்க வேண்டிய ஒரு நிலை இருக்கிறது. நாங்கள் தீர்வு தீர்வு என்று நினைத்துக்கொண்டிருக்காமல், யுத்தத்தின் வடுவில் இருந்து வெளிவரவேண்டும். வெளிவந்திருக்கின்றோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ‘ஜனாதிபதி மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சி திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த கால நினைவுகளை நினைத்து பார்த்தால் மீண்டும் அதிலிருந்து மீளவே முடியாது என்ற நிலைமையே இருந்தது. கடந்த முப்பது வருட யுத்தத்திற்கு முகம்கொடுத்து இன்று வெளியில் வந்திருக்கின்றோம். யுத்தத்திற்கு பிறகு அடிப்படை வசதிகளை நாங்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் அபிவிருத்தியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில் எங்களுடைய வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்திற்கு முகம் கொடுத்திருக்கிறது. இந்த மாகாணங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோவொரு வகையில் யுத்தத்தினால் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருகிறார்கள். வடக்கு மாகாணத்தில் முப்பதாயிரம் பேர் அங்கவீனர்களாக உள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நல்லாட்சி அரசு அங்கவீனர்களுக்கு பல உதவிகளை வழங்கி வருகிறது.” என்றுள்ளார்.

0 Responses to கடவுள் எப்போது கருணை காட்டுகிறாரோ அப்போதுதான் தமிழ் மக்களுக்கு தீர்வு: விஜயகலா

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.

அதிகமாக வாசிக்கபட்டவை...