Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நாட்டின் தேசியக் கொடியில் தமிழ், முஸ்லிம் இன அடையாளங்களைக் குறிக்கும் நிறங்களை அகற்றிவிட்டு, தனிச் சிங்களக் கொடியை மாத்திரம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பறக்கவிட அனுமதிக்க முடியுமென்றால், ஏன் நாங்கள் புலிக்கொடியைப் பறக்கவிடக் கூடாது“ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு விதத்திலும், சிங்கள மக்களுக்கு ஒரு விதத்திலும் சட்டம் செயற்படுத்தப்படுகிறதா என்று மக்கள் அஞ்சுகின்றனர். கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஞானாசார தேரரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன. கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைகளை அரசாங்கம் ஏன் கட்டுப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே சிவஞானம் சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to தனிச் சிங்களக் கொடியை தமிழ்ப் பகுதிகளில் பறக்கவிட முடியுமென்றால், ஏன் புலிக்கொடியை ஏற்ற முடியாது: சிவஞானம் சிறிதரன்

Post a Comment

Followers