Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“முப்பது வருடங்களாக தொடர்ந்த யுத்தத்தினால் நாடு மனித இரத்தத்தால் போதுமானளவு தோய்ந்துவிட்டது. அவ்வாறானதொரு நிலைமை, மீண்டும் ஏற்படவேண்டுமா? அதற்கு இனியும் இடமளிக்க முடியாது” என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பாகங்களில், கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் இனவாத நடவடிக்கைகள் காரணமாக, முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், தங்களது பிரச்சினைக்குத் தீர்வுக் காண பொதுமக்களே முயலும் நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிலையியல் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இனவாதச் செயற்பாடுகளை மீண்டும் தூண்டும் வகையிலான செயற்பாடுகள் நாட்டில் இடம்பெற்று வருகின்றன. சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதம், மதவாத்தை தூண்டும் வகையில் சிலரால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், நாட்டில் மீண்டும் அமைதியற்ற நிலை ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

30 வருடங்களாக, இந்த நாட்டு மக்கள் போதுமானளவு கண்ணீரைச் சிந்திவிட்டனர். மீண்டும் அவ்வாறான நிலைக்கு இடமளிக்க முடியாது. அண்மைய காலங்களில் இடம்பெறும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. வில்பத்து விவகாரம், தொல்பொருள் இடங்கள் அழிக்கப்படுகின்றமை, முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் ஆகியவை தொடர்பில், அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும் நிறுவனங்கள் இருந்தாலும் அவையும் இதுதொடர்பில் காத்திரமான நடவடிக்கை எதனையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையில், அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனங்கள் தமது கடமையை செய்ய தவறும் பட்சத்தில் தங்களது பிரச்சினைக்குத் தீரவுக்காண்பதற்கு பொதுமக்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to நாடு போதுமானளவு மனித இரத்தத்தால் தோய்ந்துவிட்டது; இனியும் அந்த நிலை வேண்டாம்: அநுரகுமார திசாநாயக்க

Post a Comment

Followers

உலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.