ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உயர் பதவிகளைக் கோரி செல்லவில்லை. பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தான் யாரென்பது அனைவருக்கும் தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதித் தலைவர் பதவியை எனக்கு வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில காலங்களுக்கு முன்னர் என்னிடம் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும் பிரதித் தலைவர் பதவி உட்பட மேலும் சில பதவியை எனக்கு வழங்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால், கட்சியில் உள்ள சிலர் மாத்திரம் இதனை எதிர்ப்பதாக நான் புரிந்து கொண்டுள்ளேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.தே.க.வுக்குள் உயர் பதவிகளைக் கோரவில்லை: பொன்சேகா