இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது, கைதுகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையில் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதனை முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்களின்றி தடுத்து வைப்பதற்கான அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குகின்றது. எனவே, சர்வதேச தர நிர்ணயங்களை பின்பற்றக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கடந்த இரு ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் புதிய அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மன்னிப்புச் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.

0 Responses to புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும்: சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு!